Day: October 7, 2020

முதல்வர் வேட்பாளர்!… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்!…முதல்வர் வேட்பாளர்!… வாழ்த்து தெரிவித்த அமைச்சர்!…

கடந்த சில நாட்களாகவே அதிமுக அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடுமையான போட்டி நிலவி வந்தது. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பதில் கட்சிகள் முனைப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அதிமுக கட்சியில் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர் என்பதில் குழப்பமான சூழ்நிலையே நீடித்து வந்தது. இந்நிலையில் எடப்பாடி பன்னீர்செல்வம் அவர்கள், அதிமுக முதல்வர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகளை சார்ந்த பலரும் அவருக்கு வாழ்த்துகளை

பிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்!… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து!…பிறந்தநாள் கொண்டாடும் ஜாகிர் கான்!… விரேந்திர சேவாக் ட்விட்டரில் வாழ்த்து!…

ஜாகீர் கான் என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணியின் வீரர் ஆவார். இவர் 2000 முதல் 2014 வரை இந்திய அணியில் விளையாடினார். கபில்தேவிற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் இரண்டாவது வெற்றிகரமான விரைவு வீச்சாளராகத் திகழ்ந்தார். இவர் பரோடா அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர். இவர் விளையாடிய 9 போட்டிகளில் 21 இலக்குகளை

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ!…இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிராவோ!…

டுவைன் ஜேம்ஸ் ஜோன் பிராவோ இவர் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணியின் முன்னணி துடுப்பாளர் மற்றும் முன்னாள் தலைவர் ஆவார். கடந்த சில வருடங்களாக இவர் ஐபிஎல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். இவருடைய விளையாட்டு திறமைக்காக மட்டுமல்லாமல் இவருடைய நகைச்சுவையான பேச்சு மற்றும் இவருடைய நடனத்திற்காக பல ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார். தற்போது IPL சீசனில் விளையாடிக் கொண்டிருக்கும் பிராவோ அவர்களுக்கு இன்று(07-10-2020) பிறந்தநாள்!… ரசிகர்கள் மற்றும் பல பிரபலங்கள்

முடக்கும் கொரோனா!… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை!…முடக்கும் கொரோனா!… உதவிக்கரம் நீட்டும் காவல்துறை!…

பல மாதங்களாக கொரோனாவினால் ஏற்பட்ட முடக்கம் பலருடைய வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் வாழ்க்கையை தள்ள முடியாத அளவிற்கு, கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். இக்கட்டான சூழ்நிலையில் காவல்துறை கடமையை செய்வது மட்டுமல்லாமல், இயலாத பல மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்து வருகின்றனர். தமிழ்நாடு காவல் துறை சார்பாக செய்யப்பட்ட உருக்கமான உதவி குறித்த செய்தி தான் இது! அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே 110 வயது ஆன மூதாட்டி

குறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்!..குறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது – விஜயகுமார் ஐபிஎஸ்!..

சோசியல் மீடியாவில் பல தகவல்களையும் தனது எண்ணங்களையும் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார் திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள். அவ்வாறாக இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்திதான் இது. குறுக்குவழி இலக்கை வேகப்படுத்தாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார்.

க/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா!..க/பெ ரணசிங்கம் நியாயம் கேட்கிற படம் – சூர்யா!..

நடிகர் சூர்யா க/பெ ரணசிங்கம் படத்திற்கான, தனது விமர்சனம் மற்றும் கருத்துகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் என அதில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அப்படத்தின் இயக்குனர் நடிகர் நடிகைகள் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம்

ஆயுர்வேதம் மற்றும் யோகா மூலம் கொவிட்-19-க்கு சிகிச்சை!ஆயுர்வேதம் மற்றும் யோகா மூலம் கொவிட்-19-க்கு சிகிச்சை!

கொவிட்-19 மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ நெறிமுறையை டாக்டர் ஹர்ஷ் வர்தன் வெளியிட்டார். கொவிட்-19 மேலாண்மைக்கான ஆயுர்வேதம் மற்றும் யோகாவை அடிப்படையாகக் கொண்ட தேசிய மருத்துவ நெறிமுறையை, ஆயஷ் அமைச்சர் திரு ஸ்ரீபத் யசோ நாயக் முன்னிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் இன்று வெளியிட்டார். நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ்

ஆக்கி பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளது!…ஆக்கி பயிற்சி மீண்டும் தொடங்கியுள்ளது!…

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான ஆக்கி பயிற்சி பெங்களூருவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தெற்கு மையத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்திய ஆக்கி அணிகளுக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இது முழு வீச்சை விரைவில் எட்டும் என்று அணி தலைவர்களும், பயிற்சியாளரும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அணியின் தலைவர் மன்பிரீத் சிங் உட்பட முகாமுக்கு வந்த ஆறு வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் இந்திய விளையாட்டு ஆணைய மையத்திலும் மருத்துவமனையிலும் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளனர். “நான் பயிற்சிக்கு திரும்பிய போது எனக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது நாங்கள் மீண்டும் பயிற்சியில் இணைந்துள்ளோம். நாங்கள் படிப்படியாக பழைய நிலைமைக்கு திரும்புவதற்கான திட்டத்தை பயிற்சியாளர்கள் வகுத்துள்ளனர்  விரைவில் பயிற்சி முழு வீச்சை எட்டும் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது,” என்று மன்பிரீத் கூறியுள்ளார்.